மலமிளக்கி
நாம் அனைவருமே கழிப்பறை செல்கிறோம்.ஆனால் அதை பற்றி பேச
வெட்கப்படுகிறோம்.வித விதமாக சாப்பிட ஆசைப்படுகிறோம்.ஆனால்
செரித்த உணவின் கசடு வெளியானதா என்றால், இல்லைதான்.இதற்கு
காரணம் நாம் நம் உடைக்கும் வாசனை திரவியத்துக்கும் .அதாவது
வெளி அழகுக்கு நாம் காட்டும் முக்கியத்துவம்..உள் உடலுக்கு நாம்
காட்டுவதில்லை.வண்டி வாகனத்துக்கு நாம் காட்டும் அக்கறை நம்
உடலுக்கு நாம் காட்டுவதில்லை.உடலின் கசடு வெளியானால்தான்
நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.அதிகமாக தேங்கும் கழிவாலும்
உற்பத்தியாகும் காற்றாலும் நாம் பல இன்னல்களை பெற
வேண்டிதாயிருக்கும்.நம் உடலுக்கும் சர்வீஸ் தேவை.நம் உடலில் தங்கும் கழிவுகளை அகற்ற நாம் என்னென்ன செய்கிறோம் என்றால் பூஜ்யம் தான்.
கசடுகளை தினமும் நாம் அகற்றும் போது நாம் உற்சாகம் பெறுகிறோம்.
நினைவில் வையுங்கள்.மலச்சிக்கல் பல சிக்கலை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment